UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில், எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் கூடுதல் எஸ்.பி., சுந்தர்ராஜன் அறிவுரையின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம், சனவேலி, திருவாடானை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை–அறிவியல் மகளிர் கல்லுாரி ஆகிய இடங்களில் குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமை வகித்தார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன், இணைய வழி குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.––––––
