நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : மண்டபம் ஒன்றியம் குஞ்சார் வலசை துவக்கப்பள்ளியில் உள்ள இல்லம் தேடிகல்வி மையத்தில், குழந்தைகள் தின விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை லதா தலைமை வகித்தார். ஆசிரியை நாகசக்தி வரவேற்றார்.
இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்துரை வழங்கினார்.
நேருவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்டு, பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்கள் நேரு முகமூடி அணிந்து பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, நாகசக்தி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் சாமுண்டீஸ்வரி செய்தனர்.