/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
/
பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
ADDED : நவ 14, 2025 11:09 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜான் தலைமை வகித்தார்.முதல்வர் தாமஸ் முன்னிலை வகித்தார்.
மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
*ராமநாதபுரம் தையல் காரத்தெருவில் உள்ள சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் தமிழரசி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்து கூறினார்.
வட்டார ஆசிரியர் பயிற்றுநர் முருகவேல், பள்ளி தலைமையாசிரியர் ராதா, உதவி தலைமையாசிரியர் லலிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
*பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சேதுராமு, உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்தி வரவேற்றார். பேச்சு, நாடகம், நடனம், கவிதை மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. ஆசிரியை தேவசேனா நன்றி கூறினார்.

