/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹாக்கி உலக கோப்பைக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு
/
ஹாக்கி உலக கோப்பைக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு
ADDED : நவ 14, 2025 11:09 PM

ராமநாதபுரம்: உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி 2025 க்கான ஹாக்கி கோப்பைக்கு ராமநாத புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்சென்னை, மதுரை ஆகிய இடங்களில் ஆடவர்களுக்கான ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி நவ.,28 முதல் டிச.,10 நடைபெற உள்ளது.
வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப் படுகிறது.
நேற்று ராமநாதபுரம்சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்திற்கு ஹாக்கி உலக கோப்பை, காங்கேயன் சின்னம் (லோகா) ஆகியவை வந்தன.
இதன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம், கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், விளையாட்டு துறை மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கிச் சங்க தலைவர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் கிழவன் சேதுபதி, விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

