ADDED : ஜன 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா நடந்தது.பேரரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
துணைத் தலைவர் மணிமேகலை, செயல் அலுவலர் திருப்பதி, பாக்கியராஜ், வார்டு கவுன்சிலர் மாணிக்கவேல், செந்தில்குமார், அலுவலக கணக்காளர் மாரியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. நடை பயிற்சி வசதியும் உள்ளது.

