/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள்

ADDED : ஜூலை 04, 2025 11:24 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா பராமரிப்பு செய்யப்படாததால் பல லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் பாழாகின.
ஆர்.எஸ் மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகள் நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் ஊஞ்சல், சறுக்குகளுடன் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.
இதனால் கர்ப்பிணிகளும், மருத்துவமனை வரும் நோயாளிகளும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி உள்ளன.
மேலும் பேவர் பிளாக் மூலம் நடைபாதைக்கு பல லட்சம் செலவு செய்த நிலையில் தற்போது நடைபாதையும் சேதமடைந்து புதர் மண்டி யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.