/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்கள் கட்டுரை சமர்பிப்பு
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்கள் கட்டுரை சமர்பிப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்கள் கட்டுரை சமர்பிப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்கள் கட்டுரை சமர்பிப்பு
ADDED : நவ 16, 2025 03:48 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களின் நீர் மேலாண்மை தொடர்பான படைப்புகளை பார்வையிட்டார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொ) ரவி, கல்லுாரி முதல்வர் ஆனந்த், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லியோன், செயலாளர் காந்தி, ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். மாநாடு ஒருங்கிணைப் பாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினர்.