ADDED : நவ 16, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நகராட்சி பணியாளர்களுக்கு தெருநாய்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தலின் படி நகராட்சி பணியாளர்களுக்கு தெரு நாய்களை கையாளுவதற்கான பயிற்சி தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய கால்நடை டாக்டர் ஜெய கிருஷ்ணன் மூலம் வழங்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன், நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், கால் நடை பராமரிப்பு துறை டாக்டர் மருது, துப்புரவு ஆய்வாளர்கள் ஸ்ரீஜெஷ் குமார், மாரிமுத்து, கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால் தெருக்களில் திரிந்த 31 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

