/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், மல்லி விவசாயம் பாதிப்பு: நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

ADDED : டிச 26, 2024 04:36 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மிளகாய், கொத்தமல்லி, வாழை என தோட்டப்பயிர்கள் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சேதமடைந்துள்ளதால் விரைவில் அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் கடலாடி, உத்தரகோசமங்கை, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, சிக்கல், ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் குண்டு மிளகாய் சாகுபடி நடக்கிறது. அதிக காரத்தன்மையுடன் தனித்துவம் காரணமாக வெளி மாநில, மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு அக்., நவ.,ல் பெய்ய வேண்டிய மழை பருவம் தவறி டிச.,ல் பெய்துள்ளதால் மிளகாய், கொத்தமல்லி, வாழை சாகுபடி நிலத்தில் வெள்ள நீர் புகுந்து 35 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காலதாமதம் செய்யாமல் அரசு உடனடியாக நிவாரணத்தொகை வழங்கினால் வாங்கிய கடனுக்கு வட்டி குறையும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறுகையில், மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் பயிர் சேதம் கணக்கெடுக்கப்படுகிறது. மானாவாரி மிளகாய்க்கு ஏக்கருக்கு ரூ.3400, நீர்ப்பாசனம் என்றால் ஏக்கருக்கு ரூ.6800 வரை நிவாரணம் கிடைக்கும்.
கலெக்டர் வழியாக அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். 2025 ஜன.,ல் நிவாரணம் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது என்றார்.