/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் விவசாயம் மழையால் பாதிப்பு
/
மிளகாய் விவசாயம் மழையால் பாதிப்பு
ADDED : டிச 18, 2025 05:32 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4:15 மணி முதல் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. 4:00 மணி நேரம் பெய்த கன மழைக்கு வயல்வெளிகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது.
நெற்பயிர்களுக்கு நேற்று பெய்த கனமழை பயனுள்ளதாக அமைந்த நிலையில் மிளகாய் விவசாயத்திற்கு இந்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மிளகாய் செடிகள் குத்து செடிகளாக உள்ள நிலையில் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மிளகாய் செடிகள் நீரில் அழுகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் மிளகாய் வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

