/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் உதவித்தொகை இன்னும் வரவில்லை
/
மகளிர் உதவித்தொகை இன்னும் வரவில்லை
ADDED : டிச 18, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தமிழகத்தில் மகளிர் உதவித் தொகை மாதந்தோறும் ரூ.1000 அரசு வழங்கி வருகிறது. இத்தொகை மாதந்தோறும் பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உதவித் தொகை கிடைக்கவில்லை என புகார் எழுப்பியுள்ளனர். இது குறித்து தொண்டியை சேர்ந்த சில பெண்கள் கூறியதாவது:
மாதந்தோறும் 15ந்தேதி உதவித் தொகை வரவு வைக்கப்படும். ஆனால் சிலருக்கு நான்கு நாட்களாகியும் இன்னமும் வரவாகவில்லை.
அலைபேசிக்கு குறுஞ்செய்தியும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

