/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2025 05:23 AM

ராமநாதபுரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் இரவு 11:30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் சிங்கராயர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.மறைமாவட்டபாதிரியார் கென்னடி, உதவி பாதிரியார் இனிகோ உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., சர்ச்சில் பிரேம் கிறிஸ்துதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வீடுகளில் கிறிஸ்து பிறப்பு குறித்து குடில்கள் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சக்கரகோட்டை ரோமன் சர்ச், சி.எஸ்.ஐ., சர்ச் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
*திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர், சின்னக்கீரமங்கலம் துாயபேதுரு சர்ச் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சர்ச்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பாதிரியார்கள் சிறப்பு ஆராதனைகளை நிறைவேற்றினர்.---------

