
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஏரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் சமத்துவமாக குழந்தைகள் உடை அணிந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
பள்ளி தாளாளர் முகமது சலாவுதீன் தலைமை வகித்தார். குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தனர். பரிசுகள், இனிப்பு வழங்கப்பட்டது.
ஆசிரியைகள் ஸ்வேதா, பாசமலர், ஆஷிகா, செல்லம்மாள் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஜாஸ் கல்வி நிறுவனத்தில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மாணவர்கள் இயேசு கிறிஸ்து நாடகம் நடித்தும், பாடல்கள் பாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

