/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் கூரை இடிந்து விழுந்து ரூ.2 லட்சம் எலக்ட்ரிக் பொருள் சேதம்

ADDED : டிச 27, 2025 05:30 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் கடையின் கூரை இடிந்து விழுந்ததில் எலக்ட்ரிக் கடையின் எலக்ட்ரிக் பொருட்கள் சேதமடைந்தன.
ஆர்.எஸ்.மங்கலம் மன்னர் சேதுபதி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் தரைத்தளம் மற்றும் மேல் தளத்தில் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த நிதியாண்டில் 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்தாண்டு ரூ.18 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்ட நிலையில் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் பல்வேறு பகுதிகளிலும் சேதமடைந்த சிமென்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன.
இதனால் தினமும் பயணிகள் உயிர் பயத்தில் அலறி அடித்து ஓடும் நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஸ்டூடியோ மற்றும் எலக்ட்ரிக் கடை நடத்தி வரும் முகமது ரம்ஜான் அலி 40, கடையின் கூரை பெயர்ந்து விழுந்ததில் கடையில் இருந்த பிரின்டர், லேப்டாப், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பராமரிப்பு பணி முறையாக செய்யவில்லை என்று புகார் எழுந்த நிலை யிலும், ஆளும் தி.மு.க., வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டதால் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன்பு பஸ் ஸ்டாண்ட் உறுதித்தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.