/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் பேச்சு
/
ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் பேச்சு
ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் பேச்சு
ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் பேச்சு
ADDED : அக் 05, 2025 01:34 AM

ராமநாதபுரம்:''ஒரு தொழிற்சங்கத்தின் போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ., மாநில துணைத்தலைவர் மகாலெட்சுமி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த சி.ஐ.டி.யூ., மாவட்ட 11 வது மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: போக்குவரத்து தொழிற் சங்கம் சார்பில் 48 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. சி.ஐ.டி.யூ., உடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் பல உள்ளன. அந்த சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தினமும் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவாக கருத்து தெரிவித்தால் போராட்டம் இன்னும் உத்வேகம் எடுக்கும்.
சி.ஐ.டி.யூ., அமைப்பு சட்டப்படி ஒரு தொழிலாளர் வர்க்கத்திற்கு பிரச்னை என போராடும் போது அதற்கு பிற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கும் போது தான் அந்த தொழிலாளர் சார்ந்த பிரச்னைகள் அரசின் கவனத்திற்கு விரைவாக செல்லும் என்றார்.