தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தங்க மோதிரம் வழங்கும்நிகழ்ச்சியில் குளறுபடி

தங்க மோதிரம் வழங்கும்நிகழ்ச்சியில் குளறுபடி

தங்க மோதிரம் வழங்கும்நிகழ்ச்சியில் குளறுபடி


ADDED : செப் 28, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு தாய் மாமன்  தங்க மோதிரம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியை உரிய முறையில் ஏற்பாடு செய்யாததால் நோயாளிகள் மற்றும் கர்பிணிகள் அவதியடைந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் காலை 10:00 மணிக்கு வரவைக்கப்பட்டிருந்தனர். மேலும், மகப்பேறு வார்டில் நிகழ்ச்சி நடந்ததால் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணிகளின் உறவினர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவசர சிகிச்சை பிரிவு வழியாக வெளி நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும், தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு வார்டின் குறுகிய பகுதியில் நடந்தது. இதில் அதிகாரிகளுடன் வந்தவர்கள் சூழ்ந்து கொண்டதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். மோதிரம் வாங்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர்.  உள்ளே உடன் வந்தவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் சில குழந்தைகள் காற்றோட்டம் இல்லாமல் சிரமப்பட்டனர்.  தமிழக முதல்வர் துவங்கி வைக்கும் திட்டத்தை உரிய முறையில் ஏற்பாடு செய்யாததால் நோயாளிகள் மற்றும் கர்பிணிகள் அவதியடைந்தனர்.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us