/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிறைவு விழா
/
வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிறைவு விழா
ADDED : ஜூன் 19, 2025 11:49 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிறைவு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு குறுவை பருவத்திற்கேற்ற பல்வேறு வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த பிரசார இயக்கத்தில் காரீப் பருவம் 2025 திட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம்,வேளாண் துறை இணைந்து பல்வேறு கிராமங்களில் 18 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது வரை நுாறு கிராமங்களில் லாந்தை, என்மனம் கொண்டான், கமுதி, மஞ்சக்கொல்லை, எக்கக்குடி, நொச்சியூரணி, பாண்டியூர், ஆற்றாங்கரை, கொடிக் குளம், வளனுார், மாலங்குடி, வளநாடு, கடலாடி, கொம்பூதி, பேரையூர், களரி, தொருவளூர், கழுகூரணி, திருவாடானை, மண்டபம், திருப்புல்லாணி, கடம்போடை, உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் அறிவில் நிலைய விஞ் ஞானிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள், இணைந்து மத்திய, மாநில அரசின்திட்டங்கள் பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
விளைச்சல் தரும் ரகங்கள், மண்பரிசோதனை, மண் வள அட்டை பயன்பாடு, இயற்கை விவசாயம், உயிர்ம வேளாண்மை, ஒருங்கிணைந்த வேளாண்மை பூச்சி நோய் வேளாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்ப கருத்துக்களையும், செயல் விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவயில் நிலைய விஞ்ஞானிகள விஜயகுமார், ஆனந்தராஜ், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் சுப்பிரமணி, கோனாபிரவீன், சங்கர் பங்கேற்றனர்.