/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
/
முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
ADDED : அக் 02, 2025 01:06 AM
ராமநாதபுரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் வருவதை முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் மதுரைக்கு இன்று மாலை 6:00 மணிக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் வரும் முதல்வரை மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் தி.மு.க., சார்பில் இரவு 9:00 மணிக்குவரவேற்பு அளிக்கப்படுகிறது.
இரவு 10:30 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.
துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.
நாளை காலை 10:30மணிக்கு பேராவூரில் நடைபெறும் அரசுவிழாவில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட்டை திறந்துவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 20ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்.
பார்த்திபனுார், கலெக்டர் அலுவலக வளாகம், பேராவூர் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் செல்லும் வழித்தடங்களில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., சந்தீஷ் அறிவித்துள்ளார்.