/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு பணியாளர் வேலைநிறுத்தம் உரம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு

ADDED : அக் 24, 2024 04:50 AM
திருவாடானை: கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் வாங்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு சங்க பணியாளர்கள், ரேஷன்கடை விற்பனையாளர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.21 முதல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் 18 கூட்டுறவு சங்கங்களும், 43 ரேஷன் கடைகளும் பூட்டியிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான பயிர்கடன், நகை அடமானக் கடன் பெறுதல், உரம் வாங்குதல் உள்ளிட்ட கூட்டுறவு சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது உரமிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஸ்டிரைக்கால் கூட்டுறவு சங்கங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உரங்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.