நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள நல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடந்தது. பெண்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வித்தியாசமான கோலங்களை இட்டனர்.
சிலர் தாம்பூல தட்டில் விநாயகர் உள்ளிட்ட கோலமிட்டனர்.
சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

