/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குருசடைதீவு கரையில் தேங்கிய கழிவு வலைகள் சேகரிப்பு
/
குருசடைதீவு கரையில் தேங்கிய கழிவு வலைகள் சேகரிப்பு
குருசடைதீவு கரையில் தேங்கிய கழிவு வலைகள் சேகரிப்பு
குருசடைதீவு கரையில் தேங்கிய கழிவு வலைகள் சேகரிப்பு
ADDED : ஜன 27, 2024 06:42 AM

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவு கரையில் ஒதுங்கிய கழிவு வலைகள், பாட்டில்களை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் சேகரித்தனர்.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கழிவு வலைகள், கயிறுகள், பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுகின்றனர். இதனை அரிய வகை மீன்கள் உட்கொண்டும், வலையில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தலைவர் வேல்விழி தலைமையில் தன்னார்வலர்கள் பலர் மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவு, வேதாளை, தங்கச்சிமடம் சூசையப்பர் தெரு கடற்கரையில் ஒதுங்கி கிடந்த கழிவு வலைகள், கயிறுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் என 1566 கிலோ கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

