/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் களஆய்வு
/
நயினார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் களஆய்வு
நயினார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் களஆய்வு
நயினார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் களஆய்வு
ADDED : ஏப் 15, 2025 05:39 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்ட பணிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
நயினார்கோவில் அருகே தேத்தாங்கால் ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.30 லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலும், மும்முடிச்சாத்தான் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 28.90 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது. ஆதி திராவிடர் காலனியில் ரூ.8 லட்சத்தில் நாடக மேடை பணி முடிக்கப்பட்டது.
இதேபோல் பாண்டியூரில் ஊராட்சி செயலக கட்டடம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம், ரேஷன் கடை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பகைவென்றி கிராமத்தில் நிழற்குடை, நர்சரி பண்ணை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். உடன் நயினார்கோவில் ஆணையாளர் (கி.ஊ.,) தேவபிரியதர்ஷினி, உதவி பொறியாளர்கள் கணபதி சுப்பிரமணியம், ஜெயந்தி இருந்தனர்.