/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குருபூஜையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி
/
குருபூஜையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி
குருபூஜையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி
குருபூஜையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி
ADDED : அக் 31, 2025 11:41 PM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் தேவர் குருபூஜையை சிறப்பாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நன்றி தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா, 63வது குருபூஜை விழா அக்.,28ல் ஆன்மிக விழாவுடன் துவங்கி அக்.29ல் அரசியல் விழாவாகவும், அக்.30ல் அரசு விழாவாகவும் நடந்தது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
தேவர் குருபூஜையை சிறப்பாக முடிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் கலெக்டர் நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 20 நாட்களாக கமுதி ஒன்றிய பணியாளர்கள், கமுதி, முதுகுளத்துார் பேரூராட்சி பணியாளர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை பணியாளர்களும் மக்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டம் போலீசார் சிறப்பாக செய்தனர்.
மேலும் துணை ஜனாதிபதி வருகை முன்னிட்டு குறுகிய நாட்களில் இரண்டு புதிய ஹெலிபேட் அமைக்கப்பட்டு சிறப்பாக வரவேற்பு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து குருபூஜையை சிறப்பாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நினைவிட பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

