/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
பசும்பொன்னில் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பசும்பொன்னில் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பசும்பொன்னில் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : அக் 31, 2025 11:41 PM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118 வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., புஹாரி வரவேற்றார். வருவாய்த்துறை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அரசு சார்பில் 275 பேருக்கு ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் நன்றி கூறினார். உடன் பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், லெட்சுமி உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.