/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மயான நில பாதுகாப்பு வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
மயான நில பாதுகாப்பு வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மயான நில பாதுகாப்பு வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மயான நில பாதுகாப்பு வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 05, 2025 09:09 PM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் பாதை அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநில செயலாளர் தமிழ்முருகன் கூறியதாவது:
ஆர்.எஸ்.மங்கலம் கைலாச சமுத்திரத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு 1985ல் அரசின் நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டத்தில் மயானத்திற்காக 25 சென்ட் நிலம் வழங்கப் பட்டது. பின்பு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பாதி நிலத்தை எடுத்துக் கொண்டனர்.
மீதமுள்ள நிலத்தில் தற்போது வரை எரிமேடை, சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் அக்.,29ல் அப்பகுதி மக்கள் மயானத்தை சுத்தம் செய்த போது அங்குள்ள ரியல் எஸ்டேட் செய்வோர் தாக்கியுள்ளனர். மேலும் அப்பகுதியில் 20 அடி பாதை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்றார்.