/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் யாகசாலையுடன் கும்பாபிஷேகம் துவக்கம்

ADDED : பிப் 17, 2024 04:41 AM
கமுதி: கமுதியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், கல் மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு வண்ணமிடும் பணிகள் நடக்கிறது.
கோயிலில் பிப்.21ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்வாக யாகசாலை பூஜைகள் துவக்கப்பட்டது.
திருப்பணி குழு தலைவர் காதர்பாட்ஷா, திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையை துவக்கினர்.
அப்போது அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி, நவக்கிரக ஹோமம், தீப லெட்சுமி பூஜை உட்பட தீபாராதனை நடந்தது. விழாவில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், திருப்பணி குழு நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிப்.21 காலை 9:00 மணிக்கு மேல் விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.