/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 29, 2024 11:26 PM
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்., 2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்புக் காட்டுதலுடன் துவங்குகிறது.
அன்றிரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்குகிறது. முதல் நாள் விழாவான அக்.3ல் பர்வதவர்த்தினி அம்மன் பசி பிணியை நீக்கும் அன்னபூரணி அலங்காரத்திலும், அக்., 4ல் நிறைநிலை திருமகள் மகாலட்சுமி, அக்., 5ல் கூற்று கொற்றவை திருக்கோலம் சிவதுர்க்கை, அக்., 6ல் கலைமகள் சரஸ்வதி, அக்., 7ல் முதல் அக்., 11 வரை கவுரி சிவபூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசூரமர்த்தினி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
நவராத்திரி நிறைவு விழாவான அக்., 12ல் விஜயதசமி அன்று வன்னி நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் செய்துள்ளார்.