/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
/
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 22, 2025 02:52 AM
ராமநாதபுரம்: திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதன்படி கூட்டுறவு வளர்ச்சி நிதியில் இருந்து வட்டியில்லா கடன் வசூலில் சிறப்பாக பணிபுரிந்து மாநில அளவில் 2ம் இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் காளிதாஸ், மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற்ற அபிராமம் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஞானதேசிக கலைஞர், பொதுமேலாளர் முகமது யூசப் ஆகியோருக்கு கூட்டுறவுதுறை அமைச்சர் பெரிய கருப்பன் விருதுகளை வழங்கினார்.
இவர்கள் ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ஜினுவிடம் விருதுகளை ஒப்படைத்து அவரிடம் பாராட்டு பெற்றனர்.