/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டு
/
ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 03, 2026 06:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்று ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்று பணி நியமன ஆணைகள் பெற்றவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
கடந்த 2023---24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங் களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், 3 பேர் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்று பணிபுரி கின்றனர்.
இவர்களை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

