/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் கட்டடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை சவடு மண் பயன்படுத்துவதாக புகார்
/
கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் கட்டடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை சவடு மண் பயன்படுத்துவதாக புகார்
கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் கட்டடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை சவடு மண் பயன்படுத்துவதாக புகார்
கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் கட்டடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை சவடு மண் பயன்படுத்துவதாக புகார்
ADDED : அக் 21, 2024 04:47 AM
கீழக்கரை: கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டுமானப்பணியில் முறைகேடாக சவடு மண் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கீழக்கரையில் 1976ல் கட்டப்பட்ட கட்டடத்தில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்படுகிறது. கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிமென்ட் பூச்சு உதிர்வதாலும் புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை வளாகத்தை ஒட்டியுள்ள இடத்தில் ரூ. 9 கோடியில் மருத்துவமனை அமைக்கும் பணி நடக்கிறது. மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது 30 சதவீதம் பணிகள் நடக்கிறது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய மணல் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கீழக்கரையைச் சேர்ந்த தன்னார்வலர் சிவராமலிங்கம் கூறியதாவது: கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை கட்டுமானத்திற்குரிய மண் தரமற்றதாக உள்ளது. சவடு மண் பயன்படுத்தப்படுகிறது.வட மாநில தொழிலாளர்களால் முழுவதுமாக அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுமான தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வழிகாட்ட வேண்டிய ஒப்பந்ததாரர் ஆற்று மணல் அல்லது எம்.சாண்ட் பயன்படுத்தி கட்டடம் கட்ட வேண்டும். அதை விடுத்து கண்மாய் துார்வாறும் போது கிடைத்த மண் மற்றும் கட்டடத்தின் அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்த மண்ணை கொண்டு கட்டுமானப் பணி மேற்கொள்கின்றனர்.
கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த வீடியோ வைரலானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் கூறுகையில், சமூக அமைப்புகளிடம் இருந்து புகார் வந்தது. சவடு மண் கலப்பது குறித்து கீழக்கரை நகராட்சி பொறியாளரிடம் கட்டடத் தன்மை, பயன்படுத்தும் மணல் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அதன் பின் கட்டட உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.