/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கானா பாடகி இசைவாணி மீது திருப்புல்லாணி போலீசில் புகார்
/
கானா பாடகி இசைவாணி மீது திருப்புல்லாணி போலீசில் புகார்
கானா பாடகி இசைவாணி மீது திருப்புல்லாணி போலீசில் புகார்
கானா பாடகி இசைவாணி மீது திருப்புல்லாணி போலீசில் புகார்
ADDED : நவ 29, 2024 05:33 AM

திருப்புல்லாணி: சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்புல்லாணி ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கானா பாடகி இசைவாணி ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய ஐயப்பன் பாடலை பாடி அவை வெளியான நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து மக்களின் உணர்வுகள் வேதனைப்படுத்துவோர் மீது நடவடிக்கை குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் கிஷோர், ஒன்றிய செயலாளர் சரவணன், நிர்வாகிகள் முருகபூபதி, கார்த்திக், பிரசாந்த், மனோஜ், விஜயபிரபு, பூபேஷ், லோகேஷ் பாலா உட்பட ஏராளமான ஹிந்து முன்னணி தொண்டர்கள் உடனிருந்தனர்.