/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
/
ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 18, 2025 01:21 AM
ராமநாதபுரம்; ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய சத்திரிய நாடார் சங்கத்தினர் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தனர்.
அகில இந்திய சத்திரிய நாடார் சங்கத்தின் நிறுவனத்தலைவர் வீரமணி நேற்று சந்தீஷ் எஸ்.பி., யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் சங்கம் அமைத்து பொது சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேதுமாணிக்கத்தை நடுரோட்டில் அடித்து கொடுமைப்படுத்தியதால் அவமானம் தாங்காமல் எஸ்.பி., அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சேதுமாணிக்கம் மனைவியின் தங்கை மகள் வழக்கறிஞர் சுமிதா போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், எனது பெரியப்பா சேதுமாணிக்கம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். அவர் ராமேஸ்வரம் இந்திரா நகரை சேர்ந்த பாபாமுருகனிடம் ரூ.5000 கந்து வட்டிக்கு வாங்கியிருந்தார்.
அந்த பணத்திற்கு அசலுடன் சேர்த்து ரூ.15 ஆயிரம் வட்டியும் செலுத்தி கடனை அடைத்து விட்டார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வட்டி தர வேண்டும் என பாபாமுருகன் சேதுமாணிக்கத்தை மிரட்டி வந்தார். மார்ச் 10 ல் ஆட்டோ சவாரிக்காக நின்றிருந்த சேதுமாணிக்கத்திடம் பாபாமுருகன் வட்டி பணம் கேட்டு தகராறு செய்தார்.
நடு ரோட்டில் வைத்து அவருடன் வந்தவர்களுடன் சேர்ந்து தாக்கி சட்டையை கிழித்துள்ளனர். இது குறித்து ராமேஸ்வரம் துறைமுகம் போலீசார் தட்டி கேட்ட போது அவர்களை மிரட்டி சென்றுள்ளனர். கந்து வட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் சேதுமாணிக்கத்தை தற்கொலைக்கு துாண்டிய பாபாமுருகன், அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் ஆட்டோ டிரைவர் சேதுமாணிக்கம் தற்கொலை செய்ததாக வழக்குப்பதிந்துள்ளனர். இறந்தவரே வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் தற்கொலைக்கு துாண்டியதாக பாபா முருகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.