/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகாமில் மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் அலைக்கழிப்பதாக புகார்
/
முகாமில் மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் அலைக்கழிப்பதாக புகார்
முகாமில் மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் அலைக்கழிப்பதாக புகார்
முகாமில் மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் அலைக்கழிப்பதாக புகார்
ADDED : நவ 06, 2024 06:39 AM

ராமநாதபுரம், : -மாற்றுத்திறனாளிகள் முகாமில் டாக்டர்கள் அலைக்கழிப்பு செய்வது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் அமுதாராணியிடம் புகார் தெரிவித்தனர்.
திங்கள் தோறும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடக்கிறது. கடந்த காலங்களில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாம் மாற்றுத்திறனாளிகள் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து வருவதற்குள் டாக்டர்கள் சென்று விடுவதால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.
இதனால் முன்னாள் கலெக்டர் ஜானி டாமி வர்கீஸ் நடவடிக்கையால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட பிறகும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு தொடர்கிறது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த மாவட்டத்தலைவர் ராஜேஸ், செயலாளர் ராஜ்குமார், துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதாராணியிடம் புகார் தெரிவித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: நேற்று நடந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை நிபுணர், கண் டாக்டர் வரவில்லை. அப்படியே வரும் டாக்டர்கள் காலை 11:00 மணிக்கு தான் வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து வருவதற்குள் டாக்டர்கள் சென்று விடுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.