/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்அதிகாரிகளின் கவனத்திற்கு..
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்அதிகாரிகளின் கவனத்திற்கு..
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்அதிகாரிகளின் கவனத்திற்கு..
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்அதிகாரிகளின் கவனத்திற்கு..
ADDED : அக் 11, 2025 03:59 AM

குளமாகும் ரோடு
பழைய பஸ் ஸ்டாண்டில் மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்லம்மாள், காவனுார்.
வீணாகும் குடிநீர்
ராமநாதபுரம் கண்ணகி தெருவில் பல நாட்களாக குடிநீர் ரோட்டில் ஓடுகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோடிஸ்வரன் ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான ரோடு
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்னறனர். அதிகாரிகள் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீதா, ராமநாதபுரம்.
தெருநாய்கள் தொல்லை
சக்கரகோட்டை மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி இடவேண்டும். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- ராதாகிருஷ்ணன், சக்கரகோட்டை.