/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை மருத்துவமனைக்கு காம்பவுண்ட் சுவர் அவசியம்
/
கால்நடை மருத்துவமனைக்கு காம்பவுண்ட் சுவர் அவசியம்
ADDED : ஜூலை 18, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வந்து பயனடைகின்றனர்.
மருத்துவமனை வளாகம் முறையாக பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் அச்சமடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தை பராமரிப்பு செய்வதுடன் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.