/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலுக்குள் கிடக்கும் 500 மரங்கள் வலைகளை அறுப்பதால் கவலை
/
கடலுக்குள் கிடக்கும் 500 மரங்கள் வலைகளை அறுப்பதால் கவலை
கடலுக்குள் கிடக்கும் 500 மரங்கள் வலைகளை அறுப்பதால் கவலை
கடலுக்குள் கிடக்கும் 500 மரங்கள் வலைகளை அறுப்பதால் கவலை
ADDED : நவ 02, 2025 02:12 AM
தொண்டி: வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட, 500க்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்கள் கடலுக்குள் கிடப்பதால், வலைகள் அறுபடுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பது அதிகரித்து வருகிறது. ஆழ்கடலுக்குள் சீமைக்கருவேல மரங்களை போட்டு ஒரு செயற்கை பவளப்பாறை உருவாக்கப்படும்.
அந்த மரங்களில் மீன்கள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் தஞ்சம் புகுந்து வாழ துவங்கும்.
இந்த மரங்கள் கிடப்பதால் சிறிய மீன்கள் வாழவும், ஓய்வெடுக்கவும் பாதுகாப்பாக அமை கிறது.
இவ்வாறு ஒரு இடத்தில் மீன்கள் அதிகமாக கூடிய பிறகு, ஜெலட்டின் மூலம் அப்பகுதியில் வெடி வைக்கப்படும். பல ஆயிரம் மீன்கள் மயக்கமடையும். அந்த மீன்களை வலையை போட்டு மீனவர்கள் அள்ளிக்கொண்டு வருவர்.
சிரமம் இல்லாமல் சில மணி நேரங்களில் 10 முதல் 15 டன் வரை மீன்கள் கிடைப்பதால் சில மீனவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
மற்ற மீனவர்கள் கூறும்போது, 'கடலுக்குள் விரித்த வலையை இழுக்கும் போது இந்த மரங்களில் சிக்கி சேதமடைகிறது' என்றனர்.
மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் அடிக்கடி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், வெடி வைப்பது தொடர்கிறது. வெடி வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

