/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி 80க்கு 80 காட்டன் ரக சேலைகளுக்கு இந்திய முத்திரை
/
பரமக்குடி 80க்கு 80 காட்டன் ரக சேலைகளுக்கு இந்திய முத்திரை
பரமக்குடி 80க்கு 80 காட்டன் ரக சேலைகளுக்கு இந்திய முத்திரை
பரமக்குடி 80க்கு 80 காட்டன் ரக சேலைகளுக்கு இந்திய முத்திரை
ADDED : நவ 02, 2025 02:18 AM

பரமக்குடி: பரமக்குடி காட்டன் 80க்கு 80 நுால் சேலைகள், 'இந்தியா ஹேண்ட்லுாம் பிராண்ட்' முத்திரைக்கு பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவாளர்கள் பல ஆயிரம் பேர் நுாறாண்டுகளாக தொழில் செய்கின்றனர். இங்கு, 1954 முதல் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது 83 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங் கங்கள் உள்ளன. இதில், 11,222 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் மூலம் காட்டன் பை, காட்டன், பம்பர் காட்டன், சில்க் காட்டன் கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை கோ ஆப் டெக்ஸ் மற்றும் வெளி சந்தைகளில் விற்பனைக்கு செல்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் துணி நுால் துறை மூலம் தனித்துவமான கைத்தறி ரகங்களுக்கு, 'இந்தியா ஹேண்ட்லுாம் பிராண்ட்' முத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை நெசவாளர் சேவை மைய அலுவலர் திலீபன், பரமக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களில் நெய்யப்படும் 80க்கு 80 நுால் காட்டன் ரக சேலைகளின் மாதிரிகளை பெற்று சென்றுள்ளார். இதற்கு ஐ.எச்.பி., முத்திரை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ரக சேலைகள், 5.50 மீ., 6.20 மீ., அளவுகளில் நெய்யப்பட்டு, 1,200 -- 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஐ.எச்.பி., முத்திரை கிடைத்தால் சந்தையில் தனித்துவ அடையாளம் கிடைக்கும். விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என, பரமக்குடி கைத்தறி துறை உதவி இயக்குநர் சேரன் தெரிவித்தார்.

