/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காய்க்கும் நேரடி கொள்முதல் தென்னை விவசாயிகள் கோரிக்கை
/
தேங்காய்க்கும் நேரடி கொள்முதல் தென்னை விவசாயிகள் கோரிக்கை
தேங்காய்க்கும் நேரடி கொள்முதல் தென்னை விவசாயிகள் கோரிக்கை
தேங்காய்க்கும் நேரடி கொள்முதல் தென்னை விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 02, 2025 02:23 AM

ராமநாதபுரம்: கேரளாவில் உள்ளது போல் தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் வலி யுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் முனாப் தலைமையில் நடந்தது.ராமநாதபுரத்தில் தென்னை வணிக வளாகம் அமைப்பது, தென்னை விவசாயிகளுக்கு நிதி வழங்குவது, தேங்காய்களை மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்வது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் மணிமாதவன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் தென்னை வணிக வளாகம் அமைக்க அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியும் தற்போது வரை பணிகளை துவக்கவில்லை. தென்னை வணிக வளாகம் அமைத்தால் தேங்காய் விற்பனை அதிகரிக்கும்.தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு விவசாயிகளிடம் நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்வது போல் தமிழக அரசும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

