/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் கிடப்பில் துாண்டில் வளைவு பாலம்: காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு
/
பாம்பனில் கிடப்பில் துாண்டில் வளைவு பாலம்: காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு
பாம்பனில் கிடப்பில் துாண்டில் வளைவு பாலம்: காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு
பாம்பனில் கிடப்பில் துாண்டில் வளைவு பாலம்: காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு
ADDED : நவ 02, 2025 03:34 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ரூ.150 கோடியில் துாண்டில் பாலம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டும், பணியை துவக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் 2023 ஆக., 18ல் நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல திட்டங்களை அறிவித்தார்.
இதில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால், பாம்பன் வடக்கு கடற்கரை, தங்கச்சிமடத்தில் துாண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி ரூ. 200 கோடியில் தங்கச்சிமடம், பாம்பன் வடக்கு கடற்கரையில் 2 மாதம் முன்பு துாண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி துவங்கியது.
ஆனால் முதல்வர் உத்தரவிட்டு 2 ஆண்டுகள் கடந்தும், பாம்பன் குந்துகாலில் ரூ. 150 கோடியில் துாண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை துவக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.
முதல்வர் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டதால் வரும் மழை சீசனில் கடல் கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழும்.
இதில் பாம்பன் தெற்குவாடி மற்றும் குந்துகால் கடற்கரையில் நிறுத்தும் விசைப்படகு, நாட்டுப்படகுகள் பாதுகாப்பின்றி ராட்சத அலையில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது.
இதனால் பெரும் இழப்பு ஏற்படும் எனவும், 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட முதல்வர் உத்தரவை செயல்படுத்த மீன்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாம்பன் மீனவர்கள் தெரிவித்தனர்.

