தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அஞ்சலக நேரம் நீட்டிப்பு 

அஞ்சலக நேரம் நீட்டிப்பு 

அஞ்சலக நேரம் நீட்டிப்பு 


ADDED : நவ 02, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் துரித அஞ்சல், பார்சல் சேவை இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியதாவது:

பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் அஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் சேவை நேரத்தை இரவு 9:00 மணி வரை நீட்டித்துள்ளோம். இதில் துரித அஞ்சல், பார்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

பரமக்குடி அஞ்சலகத்தில் இரவு 9:30 மணி வரையும், ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் இரவு 8:00 மணி வரையும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வணிகர்கள், இரவு நேர அஞ்சல் சேவைகளை பயன்படுத்த விரும்புவோர் பயன்பெறும் வகையில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us