/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தகவல் மையத்தை மூடியதால் அவதி
/
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தகவல் மையத்தை மூடியதால் அவதி
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தகவல் மையத்தை மூடியதால் அவதி
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தகவல் மையத்தை மூடியதால் அவதி
ADDED : ஆக 02, 2025 11:17 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தகவல் மையம் கவுன்டர் மூடியே இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பயணிகள் வந்திறங்கி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ரயிலில் பயணிக்கின்றனர்.
இங்கு வரும் பயணிகள் வெளி மாநிலம், வெளியூருக்கு செல்லும் ரயில்கள் நேரம், பிளாட்பாரம் எண், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிய தகவல் மையத்தை நாடி செல்வார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக ரயில்வே ஸ்டேஷனுக்குள் உள்ள தகவல் மைய கவுன்டர் பிளக்ஸ் பேனரில் நிரந்தரமாக மூடப்பட்டு ஊழியர்கள் யாரும் பணிபுரிவது இல்லை.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் கேட்டால் தற்போது தான் தகவல் மைய ஊழியர் வெளியில் சென்றுள்ளார் என சாதாரணமாக கூறுகின்றனர்.
இதனால் மாற்றுத்திறனாளிகள், மூத்த பயணிகள், படிக்கத் தெரியாதவர்கள் ரயில்கள் நேரம், பிளாட்பாரம் எண் குறித்து தகவல் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரித்து பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள், ஆர்வலர்கள் தெரிவித்தனர்.