/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சாலை ஓரத்தில் ஆபத்தான மின்கம்பத்தால் நெரிசல்
/
ராமேஸ்வரத்தில் சாலை ஓரத்தில் ஆபத்தான மின்கம்பத்தால் நெரிசல்
ராமேஸ்வரத்தில் சாலை ஓரத்தில் ஆபத்தான மின்கம்பத்தால் நெரிசல்
ராமேஸ்வரத்தில் சாலை ஓரத்தில் ஆபத்தான மின்கம்பத்தால் நெரிசல்
ADDED : மார் 08, 2024 12:45 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சாலை ஓரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் நகராட்சியில் பழைய போலீஸ் லைன் தெரு வழியாக கோயில் கார் பார்க்கிங், அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பிரதான சாலை உள்ளது. தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். பழைய போலீஸ் லைன் தெருவில் சாலை ஓரத்தில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது.
இதனை அகற்ற பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் 5 மாதம் முன் இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் பொருத்த அதற்கான செலவை இப்பகுதிமக்கள் வசூலித்து மின்வாரிய அலுவலகத்தில் வழங்கினர்.
ஆனால் இதுவரை மின்கம்பத்தை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால் வாகனங்கள் மோதி மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது.இதனால் இங்குள்ள ரேஷன் கடைக்கு வரும் மக்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

