/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சல் துறை உதவித்தொகை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
அஞ்சல் துறை உதவித்தொகை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
அஞ்சல் துறை உதவித்தொகை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
அஞ்சல் துறை உதவித்தொகை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 05, 2025 05:26 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் அலுவலகத்தில் மத்திய அரசின் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா திட்டத்தில் ஓர் ஆண்டு உதவித்தொகை பெறுவதற்கான போட்டியில் வென்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய அஞ்சல் துறையால் அகில இந்திய அளவில் தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா (தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை) எனும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ்மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ரூ.6000 உதவித்தொகையாக ஓர் ஆண்டிற்கு வழங்கப்படுகிறது.
இதன்படி 2024-25ம் ஆண்டு ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த7 மாணவர்கள் மற்றும் பரமக்குடி ஹரிஷ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும் ரூ. 6000 உதவி தொகை பெறுவதற்கான போட்டியில் தேர்வாகியுள்ளனர்.
அவர்களை பாராட்டும் நிகழ்ச்சி ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் நடந்தது. கோட்டக் கண்காணிப்பாளர் (பொ) மாரியப்பன் தலைமை வகித்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரூ.6000 உதவி தொகை, சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
தபால் தலை சேகரிப்பின் முக்கியத்துவம் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சலக அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.