/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., - தி.மு.க., நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை
/
காங்., - தி.மு.க., நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை
காங்., - தி.மு.க., நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை
காங்., - தி.மு.க., நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை
ADDED : அக் 11, 2024 03:06 AM
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பேரூராட்சி காங்., கவுன்சிலரும் தி.மு.க., பேரூராட்சி துணை தலைவரின் கணவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
தொண்டி பேரூராட்சி 7வது வார்டு காங்., கவுன்சிலர் காத்தராஜா. 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பேரூராட்சி துணை தலைவராக பதவி வகிப்பவர் அழகுராணி. இவரது கணவர் ராஜேந்திரன்.
நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தலைவர், துணைத்தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே வட்டாணம் விலக்கு ரோட்டில் காத்தராஜா நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ராஜேந்திரன் போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு நீ தான் காரணம் என்று கூறி காத்தராஜாவிடம் தகராறு செய்தார்.
இருவரும் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். காயமடைந்த காத்தராஜா அரசு மருத்துவமனையிலும், ராஜேந்திரன் திருவாடானை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டனர். இருவரும் தொண்டி போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

