ADDED : ஜன 22, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி,: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான காங்., கட்சியின் அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காங்., கட்சியின் கிராம, நகர மற்றும் வார்டு மறு சீரமைப்பிற்கான சட்ட சபை தொகுதி அமைப்பாளர்கள் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்துார் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
அதன்படி பரமக்குடி(தனி)- சரவணகாந்தி, அப்துல் அஜீஸ், ராமநாதபுரம்- செல்லதுரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், முதுகுளத்துார்- ரங்கநாதன், வேலுச்சாமி, திருவாடானை- குமார், துல்கிர் நியமிக்கப்பட்டனர்.