UPDATED : நவ 26, 2026 05:14 PM
ADDED : நவ 26, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: இந்திய அரசியலமைப்புச் சபை 1949ம் ஆண்டு நவ., 26ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முறையாக ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) கொண்டாடப்படுகிறது.
கீழக்கரை அருகே புல்லந்தையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்புல்லாணி பா.ஜ., ஒன்றிய தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
