/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் தொடர் வேலை நிறுத்தம்: அக்.6 முதல் நடக்கிறது அக்.6 முதல் நடக்கிறது

ADDED : அக் 09, 2025 11:09 PM
கடலாடி: கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
கடந்த அக்., 6 முதல் நடந்து வரும் இப்போராட்டத்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிகள் முடங்கியுள்ளது. கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக உரம் விவசாயிகளுக்கு வழங்குதல், நகைக் கடன் வாங்குதல், திருப்புதல் மற்றும் பல்வேறு விதமான வங்கி பரிவர்த்தனை பொதுமக்களுக்கு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலாடி தாலுகா கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் செந்துார் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஏராளமான சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆப்பனுார், கடலாடி, மேலக்கிடாரம், சாயல்குடி, செவல்பட்டி, உச்சிநத்தம், பிள்ளையார் குளம் உள்ளிட்ட 60 ஊராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.