/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடுகளை சூழ்ந்துள்ளது மழைநீர்: மக்கள் சிரமம்
/
வீடுகளை சூழ்ந்துள்ளது மழைநீர்: மக்கள் சிரமம்
ADDED : அக் 09, 2025 11:09 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி கந்தசாமிபுரம் காலனியில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியில் வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்கு முறையாக கால்வாய் வசதியில்லை. இதனால் கழிவுநீர் தெருக்கள், வீடுகளில் தேங்குகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பகுதியில் நேற்று பெய்த மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சுற்றி முழுவதும் சூழ்ந்து தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் வெளியில் வருவதற்கு சிரமப்படுகின்றனர். முதியோர்கள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் அமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.