விவசாயப் பணிகள் துவங்கியதால் கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்
விவசாயப் பணிகள் துவங்கியதால் கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்
ADDED : செப் 27, 2026 11:36 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் விவசாயப் பணிகள் துவங்கியுள்ளதால் ஆடு, மாடுகள் வளர்ப்போர் அவிழ்த்து விடாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வளர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்யத் துவங்கியதால் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடக் கின்றன.
இந்நிலையில் கிராமங்களில் ஆடு, மாடுகள் வளர்ப்போர் கயிற்றில் கட்டாமல் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இவை விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தற்போது விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மழையால் இன்னும் சில நாட்களில் பயிர்கள் முளைப்பு தன்மை பெறும்.
ஆடு, மாடுகள் மிதித்து சேதப்படுத்தினால் பெரும் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பணிகள் வீணாகும் நிலை ஏற்படும். ஆண்டு தோறும் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் கால்நடைகளால் பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாக உளளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்களது ஆடு, மாடுகளை கட்டி வைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
மீறி விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
