தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை வயல்களில் ஆபத்தான மின்கம்பங்கள்

 திருவாடானை வயல்களில் ஆபத்தான மின்கம்பங்கள்

 திருவாடானை வயல்களில் ஆபத்தான மின்கம்பங்கள்


ADDED : செப் 27, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வயல்களில் ஆபத்தான மின்கம்பங்கள் சிவகங்கை மாவட்ட மின்வாரிய நிர்வாக வரம்பிற்குள் இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வயல்வெளிகளில் துருப்பிடித்த மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந் துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் கடைசி எல்லையை ஒட்டி திருவாடானை தாலுகா கிராமங்கள் உள்ளன.

சில கிராமங்களில் விவசாய நிலங்களில் அமைந்துள்ள மின்கம்பங்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதால் அடியோடு துருப்பிடித்து பலமிழந்துள்ளன.

சின்னக் கீரமங்கலம் பறையனேந்தல் அருகே மற்றும் மல்லிக்குடி பகுதிகளில் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய கட்டத்தில் உள்ளது.

திருவாடானை பகுதி வயல்வெளிகளில் செல்லும் இந்த மின்கம்பங்களின் மின் விநியோக கட்டுப்பாடு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இதனால் சாயும் நிலை ஏற்பட்டாலோ, அல்லது மின் கோளாறுகள் ஏற்பட்டாலோ விவசாயிகள் சிவகங்கை மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக் கின்றனர்.

இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு மின்கம்பங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. சிவகங்கை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us